• Jan 18 2025

மீனாவுக்கு கிடைத்த நல்ல செய்தி.. முத்துவை கட்டிப்பிடித்து சந்தோஷம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று கிரிஷை தத்தெடுக்க கூடாது என்று விஜயா கூறுகிறார், வேண்டுமானால் நீ உன்னுடைய அம்மா வீட்டில் தத்தெடுத்து வளர்த்து கொள் என்று கூற அப்போது முத்து, கிரிஷ் பாட்டி ஒப்புக்கொண்டால் நான் இங்கேதான் கூட்டிக்கொண்டு வருவேன்’ என்று கூறுகிறார்.

 இந்த நிலையில் அண்ணாமலை, ஸ்ருதி, ரவி ஆகியோர் மீனா முத்துவின் முடிவுக்கு ஆதரவு தருகின்றனர். ஒரு சின்ன பையனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க மீனா முடிவு செய்றாங்க அது நல்ல விஷயம் தானே என்று ஸ்ருதி உறுதி கூறுகிறார். ஆனால் விஜயா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

விஜயாவுக்கு ஆதரவாக மனோஜும் கூறுகிறார். அந்த பையன் எதையாவது திருடி கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்று கூறிய நிலையில் அண்ணாமலை முத்துவிடம் ’முதலில் நீ அவங்க பாட்டி இடம் பேசு, அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும், அந்த பையனும் இங்கு வருவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், அதன் பிறகு யோசிக்கலாம்’ என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ரோகிணி தனது அம்மாவுக்கு போன் செய்து திட்டுகிறார். இந்த பிரச்சனையால் தனக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், அம்மா என்று நான் இருக்கும் போது எப்படி முத்து தத்தெடுக்கலாம் என்றும் கூறியதோடு இனிமேல் முத்து வந்து கேட்டால் அவனை முகத்தில் அடித்தால் போல் சொல்லி அனுப்பி விட வேண்டும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இந்த நிலையில் ரோகிணி தனது தோழியுடன் கிரிஷ் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ‘கிரிஷை முதலில் சென்னைக்கு அழைத்து வரவேண்டும் என்றும் இங்கு உள்ள பள்ளியில் அவனை சேர்த்து விட வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி நான் கர்ப்பமாக வேண்டும், எனக்கென்று ஒரு குழந்தை பிறந்து விட்டால், மனோஜ் என்னை நம்பி விடுவார், அதன் பிறகு மற்றவர்களை நான் எளிதாக சமாளித்து விடுவேன்’ என்று கூறும் காட்சியும் உள்ளது.

இந்த நிலையில் மீனா மற்றும் முத்து ஆகிய இருவரும் கிரிஷ் குறித்து பேசுகின்றனர். அப்போது மீனாவுக்கு அவருடைய தங்கை சீதா போன் செய்கிறார், கல்லூரி படிப்பை முடித்து விட்டதாகவும், ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ்  ஆகிவிட்டதாகவும் கூற  மகிழ்ச்சி அடைந்த மீனா அவருக்கு வாழ்த்து கூறுகிறார். அப்போது முத்து வரும்போது அவரிடமும் அதை கூறி சந்தோஷத்தில் முத்துவை கட்டி பிடித்து கொள்வதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement