• May 20 2024

'இந்த நேரத்தை என்னால் மறக்க முடியாது நன்றி தலைவரே'- ரஜினியைப் பார்த்த மகிழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகம் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வலம் வருகின்றார்.

அவர் என்ன படம் நடித்தாலும் வசூலை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் வந்துவிட்டது. அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1531154210389397505

அதிலும் சில நாட்களுக்கு முதல் வெளியாகிய டான் திரைப்படம் படு ஹிட்டானது . ரிலீஸ் ஆன விரைவிலேயே ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.

டான் படம் செம ஹிட்டடிக்க நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், ரஜினியிடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அந்த 60 மணி நேரத்தை என்னால் மறக்கவே முடியாது. நன்றி தலைவரே என சந்தோஷமாக டுவிட் செய்துள்ளார் என்பதும் குறுிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement