• Sep 19 2024

நடிகை அனுஷ்காவுக்கு தங்கச்சி நான் தான்- சிவகார்த்திகேயன் கூறிய பதிலால் ஆச்சரியத்தில் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஆங்கராக இருந்து னது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், இப்போது கோலிவுட் திரையுலகில் மிகவும் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருகின்றது.

இவரது நடிப்பில் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “ரெமோ”. இந்தத் திரைப்படத்தில் இவருடன் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் செவிலியர் ‘ரெஜினா’என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக 9 கிலோவை குறைத்ததாக நடிகர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.அது மட்டும்இல்லாமல் இந்த தோற்றத்தில் நடித்து பல காமெடியான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, சிவகார்த்திகேயன் பெண் கதாபாத்திரத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் யார் அந்த நடிகை என்று கேட்டார்களாம். அதற்கு இயக்குநர், அனுஷ்கா தங்கச்சி என்று கூறியுள்ளார், உடனே ரசிகர்களும் ஆச்சரியத்தில் பார்த்துள்ளனர். அதாவது, இவருக்கு இந்த கெட்டப்பை போட்ட மேக்கப் கலைஞர் அனுஷ்காவிற்கு தினம்தோறும் போடும் மேக்கப் கலைஞராம். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement