• Oct 06 2024

'கல்கி 2898 ஏடி' படத்திற்கு கமலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் இவ்வளவு தானா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பலரின் எதிர்பார்ப்பில் காணப்பட்ட கல்கி 28 98 ஏடி திரைப்படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இந்த படம் பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தை பார்ப்பதற்காக ஆந்திரா, தெலுங்கானாவில் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகின்றது. திருநாளைப் போல நேற்றைய நாளை கொண்டாடி உள்ளார்கள் பிரபாஸின் ரசிகர்கள்.

புராண கதையை தற்காலத்திற்கு ஏற்றவாறு டெக்னாலஜிகளுடன் இணைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின். இந்த படத்தில் கிராபிக் காட்சிகள், பிரபாஸில் நடிப்பு, மேக்கிங் என்பன அனைத்தும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது.


இந்த நிலையில், கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த கமல், அமிர்தாப் மற்றும் தீபிகாவின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி உலக நாயகன் கமலஹாசனுக்கு 20 கோடி ரூபாய், தீபிகா படுகோனுக்கு 20 கோடி ரூபாய், அமிர்தாபச்சனுக்கு பதினேழு கோடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திஷா பதானிக்கு 2 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement