• Apr 26 2024

"பணமூட்டைய எடுத்தா மக்கள் இதயத்தை எப்படி வெல்ல முடியும்?" - கதிரவனிடம் கேட்ட கமல்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கினார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்  இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.


மேலும்  இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். எனினும் இதன் பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். 

இவ்வாறுஇருக்கையில்  ஃபினாலேவில் கதிரவனிடம் பேசிய கமல், “3 லட்ச ரூபாய் எடுத்துச் சென்றதும், பணம் அதிகமானதே, முதலில் மூட்டையை எடுத்துச் சென்றால் எப்படி மக்களின் இதயத்தை வெல்ல முடியும்? எப்படி அதை யோசித்தீர்கள்?” என கேட்டார்.


எனினும் அதற்கு பதிலளித்த கதிரவன், “நான் அவ்வளவு யோசிக்கவில்லை சார், 100 நாள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம், மக்கள் அதுவரை ஆதரவு தந்தார்கள். என்ன ஒன்று, கடைசி வாரம் உங்களை பார்த்து பேச முடியாமல் போனது, இப்போது அதுவும் நடந்ததில் மகிழ்ச்சி” என கூறினார். பின்னர் கதிரவனின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அதன் பின்னர் பேசிய கமல், “உங்கள் பயணம் வெற்றியை நோக்கி தொடரும்” என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement