• May 05 2026

ஹீரோயின் பாக்குற வேலையா இது? வித்தியாசமாக போஸ் கொடுக்கும் இறுதிச்சுற்று ஹீரோயின்!வைரலாகும் வீடியோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

"டார்ஸான் தி பேர்டி" என்ற ஹிந்தி திரைப்பதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் ஆவார்.தொடர்ந்து மலையாளம் ,கன்னடம் , தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வரும் இவர் பெரிதும் அறியப்பட்டது தமிழ் சினிமாவின் மூலமே ஆகும்.


தமிழ் சினிமாவில் சுதா கொங்காரா பிரசாந்த் இயக்கத்தில் மாதவன் நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் "இறுதிச்சுற்று" ஆகும். குறித்த திரைப்படத்தில் பாக்சிங் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றிருந்தார் குறிப்பாக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களையும் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். அவ்வாறே இவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ காணொளியானது வைரலாகி வருகின்றது. அதாவது குழந்தையை போல் துள்ளிக்குதித்து திரியும் விடியோவை பதிவிட்டு நான் முழுமையாக உட்சாகத்துடன் உள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement