'பாகுபலி' படத்தின் பான் இந்திய நடிகராக மாறியுள்ள பிரபாஸ், இப்படத்தை தொடர்ந்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவினாலும், இவர் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றது.
அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ், திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'சலார்' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இப்படத்தை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி இன்று அதிகாலை 5.12 மணிக்கு இப்படத்தினுடைய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
Listen News!