• Apr 26 2024

படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடும் அஜித்... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி இருக்கின்றன. 


அந்தவகையில் தற்போது 'துணிவு' திரைப்படம் உருவாகி வருகிறது. எதிர்வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். துணிவு படத்தினைத் தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.


இவ்வாறாக பல படங்களில் நடித்து வருகின்ற அஜித்தின் திரைவாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று 'வேதாளம்'. கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார்.


இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தியிருந்தனர்.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் அன்ஸீன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement