• Sep 20 2024

வைகை புயல் வடிவேலு - இயக்குனர் சுந்தர் சி படத்தில் இணையும் ட்ரெண்டிங் நடிகைகள்... அப்டேட் இதோ!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களை இயக்கியும் உள்ளார். அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு 3 எடுக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. 


பல ஆண்டுகளுக்கு பின் வடிவேலு - சுந்தர் சி காம்போவில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒரு படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பை சமீபத்தில் தான் வெளியிட்டனர். மேலும் இப்படத்திற்கு "கேங்கர்ஸ்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் பிரபல நடிகை கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகை வாணி போஜனும் இணையவுள்ளார். வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கும் வாணி போஜன் சுந்தர் சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement