• Feb 22 2025

பிக்பாஸ் 18-இல் இருந்து எலிமினேட் ஆன ஸ்ருதிகா சம்பளம் பற்றி வெளியான தகவல்..! இதோ

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தியதைப் போல ஹிந்தியில் இந்த நிகழ்ச்சி 18வது சீசனுடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.சல்மான்கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமும் ஆன ஸ்ருதிகா போட்டியாளராக கலந்து சிறப்பாக விளையாடி இருந்தார்.


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை ஹிந்தி பிக்பாஸ் இல் கலந்து கொண்டார் இவரிற்காகவே பல தமிழ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியினை பார்த்து வந்தனர்.

பிக்பாஸ் 18 இல் 90 நாட்கள் கலந்துகொண்ட  இவர் கடந்த வாரம் எலிமினேஷன் மூலம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஸ்ருதிகா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றை தற்போது தனது ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.


அது ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் இவர் எலிமினேஷன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஒரு வாரத்திற்கு ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement