• Feb 22 2025

சிறுத்தை சிவாவிற்கு அஜித் விசேட அழைப்பு..! எதற்கு தெரியுமா.?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கார் பந்தயத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித் நேற்று முன் தினம் விபத்தில் சிக்கி காயம் ஏதும் இன்றி மீண்டார் அதனை தொடர்ந்து மீண்டும் பயிற்சிகள் அணிவகுப்புகள் என பல ரிஸ்க்குகளினை எடுத்து வருகின்றார்.


தற்போது விடாமுயற்சி குட் பேட் அக்லி எனும் இரண்டு படங்களை நடித்து முடித்திருக்கும் இவர் அடுத்து கங்குவா பட இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கூட்டணி சேரவுள்ளதாகவும் ஒரு சில செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளன இந்நிலையில் துபாயில் நடைபெற உள்ள தனது கார் பந்தயத்திற்காக இந்தியாவில் இருந்து பல நண்பர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


வீரம்,வேதாளம்,விவேகம், விசுவாசம் என தொடர்ந்து பல படங்களினை அஜித்தை வைத்து இயக்கிய சிவா உடன் இருக்கும் நட்பின் காரணமா தனது கார் ரேசிங்கிற்கு வருமாறு விசேட அழைப்பினை விடுத்துள்ளார்.அடுத்து அஜித் சினிமாவில் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement