நடிகர் பார்த்திபன் அவர்களின் திரைப்படங்கள் எப்போதுமே வித்தியாசமானதாகத்தான் இருக்கும் தமிழ் சினிமாவில் பார்த்திபன் இந்த முறை டீன்ஸ் மூலம் அப்படி ஒரு அனுபவத்தை தந்திருக்கிறார்? டீன்ஸ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ
இந்த திரைப்படத்தில் 12 சிறுவர்கள் ஆரம்பத்திலேயே தாங்கள் சிறுவர்கள் இல்லை பாரீன் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றொர்கள் தங்களுக்கு ஈகுவலாக பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். அத்தகைய பேச்சில் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்க, ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர்.அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை இழுத்துக்கொண்டு 13 பேராக செல்ல, செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.
அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் தேட, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்ற ஒரு பதட்டத்தை ஏற்படுத்தினாலும், பேயா, அமானுஷியமா இரண்டாம் பாதியில் இதற்கான லாஜிக்கை பார்த்திபன் உடைக்கும் இடம் அட இப்படியும் யோசிக்கலாமே என்று கூற வைக்கின்றது. ஆக மொத்தத்தில் படம் ஏதோ சுமாராக இருக்கிறது.
Listen News!