தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஸ்ரேயா சரண். ரஜினிகாந்த், விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பிரபல நாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் இவரது பங்குகளை மறக்க முடியாது.
2018ம் ஆண்டு ஸ்ரேயா தனது காதலன் ஆண்ட்ரூவை திருமணம் செய்து கொண்டார் மற்றும் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிகை தனது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் அழகாக வாழ்ந்து வருகின்றார். மேலும் இவர் இன்று வெளியாகிய "ரெட்ரோ " படத்தில் ஒரு அழகான பாடலில் நடனம் அடி கலக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் சில ட்ரெண்டி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி, ரசிகர்கள் அவரை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!