• Mar 26 2026

யோகிபாபுவின் பிள்ளைகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி இருக்கிறாங்களே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். எல்லா முன்னணி நடிகர் படங்களிலும் யோகி பாபு தொடர்ந்து நடித்து வருகிறார்.வாரிசு, ஜெயிலர், ஜவான் என இந்த வருடம் பல படங்களில் நடித்த அவர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் தற்போது தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார் யோகிபாபு. மாருதி இயக்கத்தில் பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் தான் நடிக்கவிருக்கிறார்.


தமிழில் வாங்கும் சம்பளத்தை விட தெலுங்கில் அவர் மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் யோகி பாபு தன்னுடைய புகைப்படங்களைம் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார்.இது குறித்த புகைபடங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement