• Jan 19 2025

ஷுட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்- தல பொங்கலாச்சே....

stella / 1 year ago

Advertisement

Listen News!


சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்னர் சூர்யா - ஜோதிகா, அஜித் - ஷாலினி, சினேகா - பிரசன்னா, கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.


அதனைத் தொடர்ந்து அண்மையில் புதிதாக இணைந்து கொண்ட ஜோடி தான் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்.இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு சிம்பிளாக நடந்தாலும் திரையுலகைச் சேர்ந்த பிரலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோ ஆவார். அவர் நடித்த ஓ மை கடவுளே, போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. அதேபோல் கீர்த்தி பாண்டியனும், அன்பிற்கினியாள், தும்பா என ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 


இந்த நிலையில்,கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் இணைந்து தல பொங்கலைக் கொண்டாடியுள்ளனர்.அதுவும் அசோக் செல்வனின் படப்பிடிப்புத் தளத்தில் பொங்கலைக் கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை கீர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement