• Nov 13 2025

யாஷின் சிக்ஸ் பேக்ஸ் பாத்தீங்களா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான வீடியோ வைரல்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் யாஷ். இவர் ராக்கி என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார். அதன் பின்பு பல்வேறு படங்களில் நடித்தார்.  இவரது நடிப்பில் வெளியான கேஜிஎப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார். 

இதை தொடர்ந்து தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை கீதா மோகன்தாஸ் இயக்குகின்றார்.  இது  டிரக் மாபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டார்  படமாக இருக்கும் என  தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தப் படம் இந்த ஆண்டு  ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் முடிவடையாததால்  படம் அடுத்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.  

யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் பெரும் வெற்றி பெற்றதால்  டாக்ஸிக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகின்றது.  மேலும்  இராமாயணம் படத்தில் ராவணனாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோவில் மேல் சட்டை இல்லாமல் பால்காணியில் யாஷ் நின்று புகை பிடிப்பது போன்று  எடுக்கப்பட்டுள்ளது.  அதில் யாஷின் சிக்ஸ் பேக்ஸ் ரசிகர்களால் கவனிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement