தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், அரசியலில் களமிறங்கி தற்போது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவியேற்பு விழா தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக அமைந்தது.
ஆனால் அந்த விழாவைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று, விஜய்யின் குடும்ப உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொள்ளாதது. குறிப்பாக அவரது மனைவி, மகன் சஞ்சய் மற்றும் மகள் ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதே நேரத்தில், விஜய்யின் பெற்றோருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் நடிகை திரிஷாவுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட திரிஷா, விஜய்யின் பெற்றோரை அன்புடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, அங்கு வந்திருந்த பலரையும் உபசரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பல்வேறு கருத்துக்களும், விவாதங்களும் இணையத்தில் பரவின.
இந்த நிலையில், தனது மகன் சஞ்சய் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாதது குறித்து முதலமைச்சர் விஜய் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான தனிப்பட்ட காரணங்களும் விருப்பங்களும் இருக்கும். யாரையும் எந்த நிகழ்விலும் கட்டாயப்படுத்துவது என் இயல்பு அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட முடிவுகளை நான் மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது கருத்தை வரவேற்று, தனிநபர் சுதந்திரத்தை மதிக்கும் அணுகுமுறை என பாராட்டி வருகின்றனர். அதேவேளை, குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததற்கான காரணம் குறித்து மேலும் கேள்விகளையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
எதுவாயினும், பதவியேற்பு விழாவைச் சுற்றிய சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் அளித்துள்ள இந்த விளக்கம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!