• Aug 04 2026

மாரி செல்வராஜின் கனவு நிறைவேறியதா.? தமிழ் சினிமாவில் புதிய திருப்பம்.! வெளியான அறிவிப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான பரியேறும் பெருமாள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் போன்ற படங்களின் மூலம் சமூக அரசியல் சார்ந்த கதைகளால் தனித்த அடையாளம் பெற்றுள்ளார். 

இந்நிலையில், நீண்ட நாட்களாக பேசப்பட்ட இளையராஜா – மாரி செல்வராஜ் கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இவ்வாறு வெளியான அறிவிப்பு வீடியோவில் மாரி செல்வராஜ், இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு சென்று அவரை சந்திக்கும் காட்சிகளும், இசையை ரசிக்கும் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. 

மேலும் படத்தின் பெயராக “மஞ்சணத்தி” என இளையராஜா எழுதியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது. மாரியின் கதை சொல்லும் பாணியும், இளையராஜாவின் இசை அனுபவமும் இணையும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement