தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் இதற்கு முன்பு வெளியான ‘ரெட்ரோ’ மற்றும் ‘கங்குவா’ திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானாலும், ரசிகர்களின் முழுமையான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
குறிப்பாக ‘கங்குவா’ திரைப்படத்திற்காக பல மாதங்கள் தீவிர விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்த திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என ரசிகர்களிடையே பெரும் நம்பிக்கையும் உருவாக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறவில்லை. இருப்பினும், அந்த திரைப்படத்தில் சூர்யாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அவர் அந்த படத்திற்காக கடுமையாக உழைத்ததாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமானார். இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என பாலாஜி உறுதியளித்ததாகவும் அவர் சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி அளித்த மற்றொரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சூர்யாவின் அர்ப்பணிப்பு குறித்து பேசிய விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி அவர் கூறுகையில்,
"அத எப்படி பண்ணாரனு சூரயா சாருக்கே தெரியல. கருப்பு கிளைமாக்ஸ இரண்டு நாள்ல எடுத்தோம், அத எப்படி எடுத்தோம்னு தெரியல. அந்த மேக்கப்பை போட 4 மணி நேரம் ஆகும், கலைக்க 2 மணி நேரம் ஆகும், 8 மணி நேரம் ஷூட்டிங் பண்ணனும். ஒரு நடிகர் அவ்ளோ கஷ்டப்பட்டத நான் நேர்ல பாத்ததே இல்ல. அந்த இடம் முழுசா அவ்ளோ புகை இருக்கும், மூக்க சிந்துனா கருப்பா வரும். ஆனா சூரியா சார் குறையும் சொல்லாம நடிச்சார். அதுலயே டான்ஸ் ஆடணும், சண்டை போடணும். இதை எல்லாம் எப்படி பண்ணார்னு அவருக்கே தெரியல. அந்த ஷாட் முடிச்சிட்டு ஒன்னு சொன்னார் 'டைரக்ட்ரே, இது எதோ ஒரு மேஜிக்'னு சொன்னார்" என தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னால் சூர்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கிய காரணமாக இருந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!