• Jun 24 2026

ரகசியமாக ஊட்டி வந்த ரஜினிகாந்த்.? ஓட்டல் முன் திரண்ட ரசிகர்கள்.!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் மைசூரு வழியாக காரில் ரகசியமாக ஊட்டிக்கு வந்தடைந்தார். அவரது வருகை முதலில் யாருக்கும் தெரியாமல் முழுமையாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

ஊட்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் நேற்றிரவு வரை உறுதியாக தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில்,  ரஜினிகாந்த் ஊட்டியில் இருப்பது குறித்து தகவல் நேற்றிரவு திடீரென காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், அவர் தங்கியிருந்த ஓட்டல் முன்பு பெரிய அளவில் திரண்டனர்.

ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களால் ஓட்டலின் பிரதான கேட் உடனடியாக மூடப்பட்டது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.


நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் ரஜினிகாந்த் தனது அறையை விட்டு வெளியே வந்து, அங்கு காத்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அவர்களுடன் சுமார் சில நிமிடங்கள் உரையாடிய அவர், அவர்களின் நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ரஜினிகாந்தின் இந்த திடீர் ஊட்டி வருகைக்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை. அவர் தனிப்பட்ட ஓய்வு அல்லது படப்பிடிப்பு தொடர்பாக வந்திருக்கலாம் என பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தகவலின்படி, ரஜினிகாந்த் இன்று மதியம் ஊட்டியில் இருந்து சென்னைக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி காந்தின் இந்த ரகசிய வருகை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement