• Apr 28 2024

கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுற்கு வாங்கிக் கொடுத்த காரைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரித்தது.இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்திலும் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன், சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்தது. படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு'லெக்ஸஸ்'ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன்.

இந்த லெக்ஸஸ் கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் ES300 H செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இந்த வகை கார்கள் பெட்ரோல் & மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் வகை கார்கள் ஆகும்.

இந்நிலையில் இந்த காருடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை பிரபல கார் சர்வீஸ் நிறுவனமான ஓசோன் டீடெய்லிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement