• Apr 28 2024

சிம்ரனைக் காதலித்த பிரபல நடிகர்… கடுப்பான விஜயகாந்த்… காரணம் என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்த முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சிம்ரன். இவர் குறிப்பாக 90களில் தமிழ் சினிமாவின் 'இடையழகி' என ரசிகர்களால் புகழப்பட்டவர். மெல்லிய உடலமைப்பைக் கொண்ட இவர் கையை தூக்கி இடையை குலுக்கி ஆட்டம் போட்டாலே போதும் அத்தனை இளசுகளும் க்ளோஸ். அந்தளவிற்கு தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதுமட்டுமன்றி இவர் அஜித், விஜய், கமல், சூர்யா, மாதவன், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அத்தோடு சமீபத்தில் மாதவன் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த 'ராக்கெட்ரி' படத்திலும் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றார்.

இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வந்த நடிகை சிம்ரன் 2003-ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இத்தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் சிம்ரன் தொடர்பான ஒரு விடயம் ஆனது தற்போது காலம் கடந்தும் பேசப்பட்டு வருகின்றது. அதாவது சிம்ரன் பிரபல நடிகர் பிரபு தேவாவின் அண்ணனும், நடிகரும், நடன இயக்குநருமான ராஜு சுந்தரம் மாஸ்டரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றார்.

இவர்கள் இருவரும் காதலித்த வந்த காலகட்டத்தில் சிம்ரனும் விஜயகாந்தும் இணைந்து நடித்த ஒரு படத்திற்கு நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கின்றார் ராஜு சுந்தரம்.

அப்படத்தின் ஹீரோ விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து ஆடுகின்ற டூயட் பாடல் படமாக்கப்பட்டு வரும் பொழுது விஜயகாந்தை ஒரு இடத்தில் ஆட வைத்தும், சிம்ரனை வேறொரு இடத்தில் ஆட வைத்தும் பாடலை எடுத்துக்கொண்டு இருந்திருக்கின்றார் நடன இயக்குநர் ராஜு சுந்தரம்.

இதை உன்னிப்பாக கவனித்த விஜயகாந்த் ராஜு சுந்தரத்தை அழைத்து "இப்படி நீங்கள் பாடலை எடுத்தால் என் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள், இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுங்கள்" என்று கோபத்துடன் கட் அண்ட் ரைட்டாக அவரைப் பார்த்து கூறியிருக்கின்றார். விஜயகாந்த் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் பின்னர் அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து பாடலை எடுத்துள்ளார் ராஜு சுந்தரம்.

இச்சம்பவம் இடம்பெற்று பல காலம் ஆகியிருப்பினும் இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement