• Sep 21 2024

சென்னையில் இருக்கும் நடிகர் சிம்புவின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும் வலம் வருகின்றார். 

லிட்டில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர். அந்த பட்டத்தை அவரே ஏற்றுக்கொண்டு எல்லா படங்களிலும் பதிவு செய்து வந்தார்.

இதன் பின் சில காரணங்களால் இனி தனக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வேண்டாம் என அறிவித்தார். தன்னை சிலம்பரசன் அல்லது எஸ்டிஆர் என்றே அழைக்கவும் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை செய்தார்.

இப்போது அவர் உடல் எடையை எல்லாம் குறைத்து புதிய மனிதராக சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. இவரது நடிப்பில் தற்பொழுது வெந்து தணிந்தது் காடு மற்றும் பத்துத் தல ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.

அத்தோடு நடிகர் சிலம்பரசனுக்கு தி நகரில் வீடு இருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இதோ சென்னையில் இருக்கும் அவரது வெளிப்புற வீட்டின் புகைப்படங்கள்,




Advertisement

Advertisement