• Sep 20 2024

திரையுலகின் 'DSP' க்கு பிறந்த நாள், குவியும் வாழ்த்துக்கள் !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிதும் பணியாற்றும் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தனது முதலெழுத்துக்களால் 'DSP' என அறியப்படுகிறார்.திரையுலகில் 20  வருடகால அனுபவம் கொண்ட  தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை 100 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


தமிழில் பெரிதும் அறியப்படும் 'சச்சின்' படத்தின் ஒவ்வொரு பாடல்களிலும் புதுமையான அனுபவத்தை நமக்கு கொடுத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாதின் சமீபத்தைய "புல்லட்" பாடல் இருமொழிகளிகளும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது என்பது யாவரும் அறிந்தது.


தற்போது விக்ரமின் "தங்கலான்" படத்தின் படத்திற்கு இசையமைதியிருக்கும் 'DSP' பாடல்களுக்கெனவே தனி ரசிகர் படை உள்ளது என்பதை குறிப்பிடலாம்.இன்று பிறந்த நாளை கொண்டாடும் இந்திய திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன. 


Advertisement

Advertisement