• Mar 25 2026

’குட்நைட்’ இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் நடிகர்.. வேற லெவலில் உருவாகும் படம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

மணிகண்டன் நடித்தகுட்நைட்என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் அடுத்ததாக மாஸ் நடிகர் ஒருவரின் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவானகுட்நைட்திரைப்படம் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 30 கோடிக்கு அதிகமாக வசூல் செய்ததாகவும் அதுமட்டுமின்றி இந்த படம் ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த விநாயகர் சந்திரசேகர் சந்திரசேகரனுக்கு பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து திரைப்படங்கள் இயக்க வாய்ப்புகள் வந்த நிலையில் தற்போது அவர் தனது அடுத்த படத்தை கிட்டத்தட்ட லாக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது




இந்த நிலையில் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறிய கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்து விட்டதை அடுத்து இருவரும் சேர்ந்து படம் செய்யலாம் என்று உறுதி கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது

சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் விநாயக் சந்திரசேகரன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் ஆரம்ப கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement