• Sep 22 2023

கயலைக் கடத்திச் சென்ற கௌதம்- சிவசங்கரி போட்ட அடுத்த பிளான்- எழில் உண்மையை அறிந்து காப்பாற்றுவாரா?- எதிர்பாராத திருப்பங்களுடன் கயல் சீரியல்

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல். இந்த சீரியலில் கயலின் தங்கச்சி ஆர்த்தியைத் தான் எழில் திருமணம் செய்யவுள்ளார். இதனால் கயல் எழில் மீது இருக்கும் காதலை மறைத்து விட்டு எப்படியாவது ஆர்த்திக்கு எழிலைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.

அத்தோடு கயல் தன்னை திருமணம் செய்த விட்டதாக ஒரு நபர் கூறி கயல் பற்றி தப்பு தப்பாக கூறியிருந்தார். இதுக்கெல்லாம் தனது பெரியப்பா தான் காரணம் என்று நினைத்திருந்த கயலுக்கு எழிலின் அம்மா தான் கதைகட்டி விட்ட விஷயம் தெரிந்து விட்டது. இருப்பினும் எழிலின் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக உண்மையை எழிலிடம் சொல்லாமல் இருக்கின்றார்.


அப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரபு என்பவரை வைத்து கயலின் தங்கையை சிவசங்கரி மிரட்டியிருந்தார். அதுக்கான பதிலடியை கயல் கொடுத்திருந்தார்.இதனை அடுத்து கயலை டாக்டர் கௌதம் கடத்திச் சென்று விட்டார். இதனால் கயல் இந்த ஆபத்திலிருந்து எப்படி தப்புவார்.

எழில் கயலைக் காப்பாற்றுவாரா, எழிலுக்கு தன்னுடைய அம்மாவைப் பற்றி முழுமையாகத் தெரிய வருமா? எழில் யாரைத் திருமணம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement