• Sep 20 2024

கௌதமியின் மகளும் நடிகை தானா..வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பிடித்துக் கொண்டதோடு ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய நடிகை தான் கௌதமி. இவர் ரஜினிகாந்த் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.



இப்படத்தினைத் தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார், பின் கார்த்திக், பிரவு, விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானார்.

மேலும் இவர் 1998ம் ஆண்டு சந்தீப் பாடியா என்பவரை திருமணம் செய்து பின் 1999ம் ஆண்டே விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.



விவாகரத்துக்கு பின்னர் கமல்ஹாசன் உடன் கெளதமி 10 வருடங்களுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்ததும், அதன் பின் பிரிந்துவிட்டதை பற்றி முறைப்படி அறிவித்ததும் எல்லோருக்கும் தெரியும்.

கௌதமியின் மகள் சுப்புலக்ஷ்மி சினிமாவில் ஹீரோயின் ஆக இருக்கிறார் என அப்போது இருந்தே கூறப்பட்டு  வருகிறது. அதற்கான முயற்சிகளில் தான் கௌதமி ஈடுபட்டு வருகிறார் என செய்திகளும் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சுப்புலக்ஷ்மி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இதோ 





Advertisement

Advertisement