• Jan 19 2025

பாக்கியா வீட்டில் அதிரடி காட்டிய கணேஷ்.. ஈஸ்வரி காலில் விழுந்து அழுத அமிர்தா! தனித்து நின்ற எழில்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, பாக்கியா வீட்டிற்கு வந்த அமிர்தாவின் அம்மா, அமிர்தா எங்க, கணேஷ் விஷயத்தை சொல்லிட்டிங்களா? அவள வெளிய அனுப்பிடாதைங்க அவ பாவம் என கதறுகிறார்.

அந்த நேரத்தில், அமிர்தாவும், எழிலும் வீட்டிற்கு வர, அமிர்தா அவருடைய அம்மாவை பிடித்து அழுகிறார். பாக்கியா என்ன நடந்த என கேட்க, நாம கணேஷ்ச பார்த்தோம் என எழில் சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து, கணேஷ் தனது பெற்றோருடன் பாக்கியா வீட்டிற்கு வர எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது கணேஷ் அமிர்தாவிடம் நெருங்க, அவரது அம்மா மறுப்பக்கம் இழுத்து சென்று, கணேஷ்க்கு பேசுகிறார். கணேஷின் அம்மா, அப்பா உடனும் ஏன் இவன் திரும்பி வந்தான் என வாக்குவாதம் செய்கிறார்.

நிலாவையும் கணேஷ் கூப்பிட, குழந்தை பயத்தில் ராமமூர்த்தியிடம் செல்கிறது. இதை பார்த்த கணேஷ் ஏன் இப்படி பண்ணுறாங்க, அமிர்தாவ என் கூட வர சொல்லுங்க என கெஞ்ச, அமிர்தாவின் அம்மா தாறுமாறாக திட்டுகிறார். எழிலிடம் இவன் செத்து போய்ட்டான்.. இவனுக்காக என் பிள்ளைய விட்டுடாதைங்க என கெஞ்சுகிறார்.


இதன்போது, கணேஷின் அப்பா, அவன் கேக்கிறது நியாயம் தானே, பாக்கியாவுக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தம்.இப்ப அது முடிஞ்சி போயிட்டு என சொல்லுகிறார்.

இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் போது ஈஸ்வரி தனது பேரனின் வாழ்க்கை இப்படி ஆகிட்டே என அழுகிறார். இதை பார்த்து எழில் அவரை சமாதானம் செய்ய, அமிர்தா ஈஸ்வரியின் காலில் விழுந்து எனக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. என்ன மன்னிச்சிடுங்க என அழுகிறார்.


அதன்பின், எழில் தோலில் சாய்ந்து அமிர்தா அழ, அவன தொடாத என கத்துகிறார். அப்போது செழியன் கணேஷின் சேட்டை பிடித்து இழுத்துட்டு வர, கணேசின் அம்மா தடுக்கிறார்.

நான் என் அமிர்தா கூடவே கதைக்கிறேன் என அமிர்தாவிடம் சென்ற கணேஷ், நீங்க என் கூட வரணும் .நான் உங்களை நல்லா பாத்துப்பன் என சொல்லுகிறார். எனினும் அமிர்தா அமைதியாக நிக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement