• Sep 23 2026

GOAT ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி! முதல் ஷோ எத்தனை மணிக்கு தெரியுமா? குஷியில் ரசிகர்கள்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாசான நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் திரைப்படம் கோட். நாளை எப்போது விடியும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது ஸ்பெஷல் சோ தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.


அரசு இதுவரை GOAT படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வெறும் 4 ஷோ மட்டுமே திரையிடமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ஓப்பனிங் வசூலில் பாதிப்பு இருக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.


காலை 9 மணிக்கு தொடங்கி மொத்தம் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிக்கு மட்டும் இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான நியூசாகத்தான் இருக்கும். இதோ அந்த அனுமதி பத்திரம்.


Advertisement

Advertisement