• Mar 16 2025

படப்பிடிப்பின் போது விபத்துக்குள்ளான வரலட்சுமி..! சோகத்தில் ரசிகர்கள்!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் அண்மையில் ஒரு படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போது சிறிய காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவலைப்பட வைத்துள்ளது.

வரலட்சுமி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சி ஒன்றின் போது எதிர்பாராத விதமாக அவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் முக்கியமான அதிரடி காட்சிகள் இடம்பெற்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்து படக்குழுவினர் தெரிவித்ததாவது, "படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. ஒரு முக்கியமான சண்டைக் காட்சிக்காக வரலட்சுமி மிகுந்த முயற்சியுடன் நடித்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத ஒரு நேரத்தில் அவர் சிறிய அளவில் காயமடைந்தார். இதனால் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது" என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் சிறிய அளவிலேயே இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் இணைந்துவிடுவதாகவும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார். மேலும் "ரசிகர்களைக் கவலைப்பட வேண்டாம் என்றதுடன் இது ஒரு சாதாரண விடயம். விரைவில் பணிக்குத் திரும்புவேன்!" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ரசிகர்கள் அவரை திரையில் பார்ப்பதற்கு மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement