விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் ரோஷினி ஹரிப்ரியன். இந்த தொடரில் கதாநாயகியாக நடித்த அவர், தனது இயல்பான நடிப்பாலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளாலும் வீட்டு பெண்கள் முதல் இளைஞர்கள் வரை பலரின் ஆதரவை பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரோஷினி ஹரிப்ரியன், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி அவர்களை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் எளிமையாகவும் ஆனந்தமாகவும் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண விழாவில், ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அவருடன் இணைந்து நடித்த பலரும் கலந்துகொண்டனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தன.
திருமணத்திற்குப் பிறகு, ரோஷினி தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு ரொமான்டிக் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாகி விட்டது.
Listen News!