• May 05 2026

சத்தமில்லாமல் தயாராகும் 'லோகா 2' ஸ்கிரிப்ட்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா.? கல்யாணி பகீர்

shali / 2 months ago

Advertisement

Listen News!

மலையாளம் – தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்த படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியானது ‘லோகா’. இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை முன்னணி நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கதைத் தேர்வில் தனித்துவம் காட்டி வரும் துல்கர் சல்மான் தயாரிப்பில் வந்த இந்த படம், வெளியான பிறகு விமர்சகர்களிடமிருந்து நேர்மையான பாராட்டுகளை பெற்றது.


இந்த படத்தில்  நஸ்லன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களின் பங்களிப்பும் கதையை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக சாண்டி மாஸ்டர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசுபொருளாக அமைந்தது.

இந்நிலையில், ‘லோகா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

அவர் அதன்போது, “லோகா இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும். இரண்டாம் பாகத்திலும் நான் இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement