தென்னிந்திய திரைப்படத் துறையில் இயக்குநராக திகழ்பவரே சுசீந்திரன். இவர் வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்துடன் தனது திரைப் பயணத்தை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல , ஜீவா , பாயும் புலி மற்றும் பாண்டி நாடு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
தற்பொழுது நேர்காணல் ஒன்றில் நடிகர் சிம்பு பற்றி கதைத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், தான் படம் ஒன்றை 22 நாட்களில் எடுத்திருந்தேன் அந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் ஜெய்யினை வைத்து ஈஸ்வரன் என்ற குடும்ப படம் ஒன்றை எடுப்பதற்கு முடிவெடுத்திருந்தேன்.
அந்தவேளை சிம்பு என்னிடம் வந்து " என்ன நீங்கள் கொஞ்ச நாட்களிலே படம் எடுத்து ரிலீஸ் பண்ணுறீங்கள் என்னையும் வைத்து அப்படி ஒரு படம் எடுங்கள் " என்றார். குறிப்பாக , தனக்கு மாநாடு பட ஷூட்டிங் இருக்கு அதற்கு முன்னர் படம் ஒன்றை எடுங்கள் என்று கூறியிருந்தார்.
உடனேயே நான் ஜெய்யை வைத்து எடுப்பதற்காக இருந்த ஈஸ்வரன் படத்தின் கதையை சிம்புவிற்கு கூறினேன் உடனே அவர் காறி துப்பிவிட்டார் என்றார் இயக்குநர். பின்னர் அந்தப் படத்தின் கதையை சிம்புவிற்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதியிருந்தேன் என்றதுடன் அந்தப் படத்தின் போது சிம்பு எனக்கு வைத்த செக் 22 நாட்களுக்குள்ள படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
Listen News!