• Apr 29 2024

மாஸாக வெளிவந்த 'பிரின்ஸ்' பட போஸ்டர்... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கும், நகைச்சுவைக்கும் குறைவில்லாத ஒரு நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் மக்களிற்கு பிடித்துப் போய் விடும் என்று கூறுமளவிற்கு தன்னுடைய நடிப்பின் திறமையினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். 

அந்தவகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலினைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின.

இதன் காரணமாக அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'பிரின்ஸ்' படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப் என்பவர் இயக்கி உள்ளார். 


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரேம்ஜி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்தோடு தமன் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். அதாவது பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடித்து அசத்தியுள்ளார்.

இப்படத்தின் உடைய ஷூட்டிங் யாவும் முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து 'பிம்பிலிகா பிலாபி..' என்ற பாடல் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அச்சு அசலாக 'மாஸ்டர்' பட விஜய் போல் சிவகார்த்திகேயனின் தோற்றமானது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது அந்த போஸ்டரில் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement