• Feb 14 2026

"Sk26" குறித்து சிவகார்த்திகேயனே வெளியிட்ட அறிவிப்பு.! குஷியில் ரசிகர்கள்

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலங்களில் காமெடி மற்றும் கமர்ஷியல் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த, வித்தியாசமான திரைக்கதையைக் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதன் காரணமாகவே அவரது படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் இதன் மூலம் வெறும் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல், நம்பகமான நடிகராகவும்  மாறியுள்ளார். இந்த நிலையில், தனது அடுத்த படத்தைப் பற்றிய ஒரு மாஸ் அப்டேட்டை சிவகார்த்திகேயனே நேரடியாக தெரிவித்துள்ளது தற்போது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அவரது 25வது திரைப்படமான ‘பராசக்தி’, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

இதன் வெற்றிக்குப் பிறகு, அவரது 26வது படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ‘பராசக்தி’ வெளியானதிலிருந்து, சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் ஒரு ரசிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த போது, “சார், உங்களது 26வது படம் குறித்த அப்டேட் எப்போது வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்விக்கு உடனடியாக பதிலளித்த சிவகார்த்திகேயன், “அடுத்த வாரம் தெரிவிப்போம். ” என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement