பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் வாரணாசியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற போது, அவர் தலையில் அடித்து விரட்டி விட்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த வீடியோ வைரலாகியதும் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பான உண்மை நிலவரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத் தயாரிப்பாளர் அனில் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், 'இந்தச் செய்தி எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அந்த வீடியோவை நான் இப்போதுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானா யாரையும் அடிக்கவில்லை, மாறாக அது எனது படத்தின் ஷாட். அதை நாங்கள் படமாக்கிக் கொண்டிருந்தோம். பனாரஸின் நடுவில் உள்ள சாலையில், அங்கு நானாவின் அருகில் வரும் ஒரு பையனை தலையில் அடிக்க வேண்டும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, நானாவும் அவனை அடித்தார்.
ஆனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதை தங்கள் மொபைல் கேமராக்களில் பதிவு செய்து, படத்தின் ஷாட்டை கசியவிட்டனர். இப்போது, சமூக ஊடகங்களில் நானா எதிர்மறையான மற்றும் முரட்டுத்தனமான நடிகராக முன்னிறுத்தப்படுகிறார், இது முற்றிலும் தவறானது. இந்த வீடியோவின் உண்மையை ரசிகர்கள் புரிந்து கொள்ளுமாறு ஆஜ் தக் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இது படத்தின் ஷாட். நானா யாரையும் அடிக்கவில்லை' என கூறியுள்ளார்.
#WATCH | वाराणसी में फिल्म जर्नी की शूटिंग कर रहे नाना पाटेकर का फैन को थप्पड़ मारते हुए वीडियो वायरल हो गया। फैन नाना पाटेकर संग सेल्फी लेने पहुंचा तो अभिनेता ने गुस्से में उसके सिर पर थप्पड़ मारा। फिल्म की यूनिट के सदस्य ने लड़के की गर्दन पकड़कर भगाया। pic.twitter.com/oU2WrY2Bv1
Listen News!