• May 29 2023

விஜய் ஆண்டனியால் மரணத்தின் எல்லைக்கே சென்ற பிரபல நடிகை! நடந்தது என்ன...?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். மேலும் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக மலேசியாவில் கடலில் ஷூட்டிங் நடத்திய போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

முகத்தில் அதிகம் காயம் ஏற்பட்ட நிலையில் பல அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது திரும்பி வந்திருக்கிறார் அவர்.

அத்தோடு அந்த விபத்தில் பிச்சைக்காரன் 2 நடிகை காவ்யா தாப்பர் மரணத்தின் எல்லைக்கே சென்று வந்ததாக கூறி இருக்கிறார்.

படகில் விஜய் ஆண்டனி உடன் சென்றுகொண்டிருக்கும்போது இன்னொரு படகு திடீரென மோதியது.  எனினும் அப்போது நீரில் விழுந்த பின் விஜய் ஆண்டனி தத்தளித்து கொண்டிருந்தார். அவரை காப்பாற்ற சென்றேன். அதற்குள் படக்குழுவும் அங்கு வந்துவிட்டனர். எனக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது.



விஜய் ஆண்டனியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அதிக நேரத்திற்கு பிறகே சுயநினைவுக்கு வந்தார்.

அத்தோடு எனது முகத்தில் அதிகம் காயம் ஏற்பட்டு இருந்தது, மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது..அதற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டாலும் அதன் தழும்பு வாழ்நாள் முழுக்க இருக்கும்.

அத்தோடு மரணத்தின் எல்லை வரை சென்ற இந்த விபத்தை நான் எப்போதும் மறக்கவே மாட்டேன் என காவ்யா தாப்பர் கூறி இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement