• Sep 22 2024

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபல நடிகரின் ட்ரெய்லர்- பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அமீர்கான்.இவர் நடிகர் மட்டும் அல்லாது இயக்குநர் தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் ஹாலிவுட்டில் கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலகளவில் பெரும் கவனம் பெற்ற படம் ஃபாரஸ்ட் கம்ப் (Forest Gump). இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். 27 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் இந்தியில் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்திற்கு லால் சிங் சத்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கரீனா கபூர், நாகசைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் ஷாரூக்கான் ஒரு கெஸ்ட் ரோலும் செய்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியின் இடைவெளியின்போது வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement