• May 20 2024

கோபியைப் போல பழனிச்சாமியை நீ கட்டிக்கிறியா எனக் கேட்ட எழில்- முறையாக வெளுத்து வாங்கிய பாக்கியா- புகழ்ந்து தள்ளிய ஈஸ்வரி

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பழனிச்சாமி வீட்டுக்கச் சென்ற கோபி. இனிமேல் நீங்க பாக்கிவிடம் பேசக் கூடாது அங்க வரக்கூடாது என பல கண்டிஷன் போடுகின்றார்.அதையெல்லாம் கேட்டுக் கொண்ட பழனிச்சாமி உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க. தேவையில்லாதது எல்லாத்திலையும் மூக்கை நுழைக்காதீங்க என்று சொல்லி அனுப்புகின்றார்.


பழனிச்சாமியிடம் பேசி விட்டு கோபி வெளியே வர எழில் பேழனி வீட்டுக்கு வருகின்றார். அப்போது எழில் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க கோபி நீங்க யாரும் கேட்கல அதான் நானாவது போய் கேட்கலாம் என்று வந்தேன் பாக்கியாவை அவன் எப்படி பொண்ணு பார்க்க வரலாம் என்று கேட்க எழில் அதிர்ச்சியடைகின்றார்.

இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் எங்க அம்மாவுக்கு புடிச்சிருந்தா பண்ணிங்க போறாங்க நீங்க இதில எல்லாம் தலை இடாதீங்க என கோபியைத் திட்டி அனுப்புகின்றார். பின்னே பழனிச்சாமி வீட்டுக்குள்ளே சென்றதும் பழனி எழிலுடன் பேசி விட்டு எழில் பார்க்க வந்த தயாரிப்பாளரை பார்ப்பதற்காக கூட்டிக் கொண்டு செல்கின்றார்.

போகும் போது கோபி பேசின விஷயத்துக்காக மன்னிப்புக் கேட்கின்றார். அதற்கு பழனிச்சாமி அதையெல்லாம் நான் எப்பவோ மறந்திட்டேன். என்று சொல்லி சமாளிக்கின்றார். பின்னர் வீட்டுக்கு வந்த எழில் பழனிச்சாமி கூட்டிட்டு போன தயாரிப்பாளர் குறித்து பேசுகின்றார். பின்னர் கோபி பழனி வீட்டிற்கு சென்று உன்னை பொண்ணு பார்க்க வந்ததாக நினைத்து பேசி இருக்கிறார் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார்.


தொடர்ந்து எழில் எதுக்கு தேவையில்லாமல் அவருக்கு வேற இடத்தில பொண்ணு பார்க்கனும் உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு நீயே கட்டிக்கோ என்றுசொல்ல பாக்கியா அதிர்ச்சியடைந்து எழிலைப் போட்டு அடிக்கின்றார். உனக்க எப்பிடி இப்படி எல்லாம் பேசத் தோணுது என்று வெளுக்கின்றார்.இதனால் எழில் சும்மா கேட்டதாக சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்.

தொடர்ந்து கோபி ஈஸ்வரியிடம் பழனி பற்றி சொல்ல ஈஸ்வரி பழனி நல்ல பையன் என்று பாராட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement