• Apr 28 2024

வசூலில் மாஸ் காட்டும் 'ஜவான்'... இரண்டாம் நாளில் இத்தனை கோடியா..? எகிறும் எதிர்பார்ப்புக்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'ஜவான்'. இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்துள்ளார். அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. 


இப்படம் வெளியாகி ஒருபக்கம் பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் எழுந்தாலும்  நெகட்டிவ் விமர்சனமும் பேசப்பட்டு வருகின்றது. அதாவது இதில் ஒரு சீன்கூட புதிதாக இல்லை. படம் ரொம்பவே நீளமாக செல்கிறது. பல படங்களினுடைய கலவை தான் ஜவான் என தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துவருகின்றன. 


இந்நிலையில் ஜவான் படமானது முதல் நாளில் உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.129.6 கோடி வசூலித்திருந்தது. இதனையடுத்து தற்போது இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் ஜவான் ரூ.53 கோடியை வசூலித்துள்ளது. இதில் இந்தியில் மட்டும் ரூ47 கோடியும், தமிழில் ரூ 3.5 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. போகப்போக ஜவானின் வசூல் அதிகரிக்குமா..? அல்லது சரிவடையுமா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement

Advertisement