• Feb 23 2025

’ஈரமான ரோஜாவே’ திரவியம் நடிக்கும் புதிய தொடர்.. சந்தானம் பட நடிகை தான் ஹீரோயின்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்ஈரமான ரோஜாவேஎன்ற சீரியலில் நடிக்கும் நடிகர் திரவியம் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் இந்த சீரியல் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்று கூறப்படுகிறதுவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ’ஈரமான ரோஜாவே’. இந்த சீரியலின் 2 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில்ஈரமான ரோஜாவேஇரண்டு சீசன்களிலும் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் திரவியம். இவர் இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்பதும் இந்த சீரியலின் இரண்டு சீசன்கள் அவருக்கு டிவி வட்டாரத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க திரவியம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கதாநாயகனாக திரவியம் நடிக்கும் இந்த சீரியலில் ஜோடியாக ஷ்ரித்தா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இவர் நடிகர் சந்தானம் நடித்ததில்லுக்கு துட்டுஎன்ற படத்தில் நாயகி ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பானநம்ம வீட்டு மினாட்சிதொடரிலும் இவர் ஒரு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

திரவியம் - ஷ்ரித்தா நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ கூட தயாராகி விட்டதாகவும் விரைவில் விஜய் டிவியில் அதை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement