• Jan 19 2025

இனிமேல் பெரிய பட்ஜெட்டும் வேண்டாம், பெரிய நடிகரும் வேண்டாம்.. நொந்து நூலான ராஜூ முருகன்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூ முருகன்குக்கூ’ ‘ஜோக்கர்’ ’ஜிப்சிபோன்ற படங்களில் எடுத்த நல்ல பெயரைஜப்பான்என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் இழந்து விட்டதை அடுத்து இனிமேல் தனது படத்திற்கு பெரிய பட்ஜெட்டும் வேண்டாம், பெரிய நடிகரும் வேண்டாம் என்று முடிவு எடுத்து மீண்டும் சின்ன பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பத்திரிகையில் பல ஆண்டுகள் பணிபுரிந்த ராஜூ முருகன் அதன் பிறகு 2014 ஆம் ஆண்டுகுக்கூஎன்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பதும் தரமான இயக்குனர் என்ற பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவர் இயக்கியஜோக்கர்’ ’ஜிப்சிஆகிய படங்களும் வசூல் அளவில் பெரிய லாபம் இல்லாவிட்டாலும் தரமான படம் என்ற விமர்சனம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஜோக்கர் திரைப்படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பதும், அதேபோல் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது கிடைத்தது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கார்த்தி நடித்தஜப்பான்என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது என்பதும் பாக்ஸ் ஆபீஸ் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தான் இயக்குனர் ராஜு முருகன் பெரிய நடிகர்களின் பின்னால் சென்று கமர்ஷியல் படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் அவர் தனது பாணியில் படம் எடுத்தால் மட்டுமே அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்றும் அவரது நட்பு வட்டாரங்கள் கூறினார்.

இதனை அடுத்து இனிமேல் பெரிய பட்ஜெட் படமும் வேண்டாம், பெரிய நடிகர்கள் படமும் வேண்டாம் என்று முடிவு செய்த ராஜூ முருகன் தற்போது முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், இதற்கான கதை விவாதத்தில் இயக்குனர் மணிகண்டனுடன் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ராஜூ முருகன் இயக்கும் அடுத்த திரைப்படத்தை அம்பேத்குமார் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement