• Dec 05 2023

ப்ரியாவிற்கு தெரியவந்த உண்மை... சக்தியை அறைந்த காவியா... கையெடுத்துக் கும்பிட்டுக் கதறி அழும் சக்தி... 'Eeramaana Rojaave' ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சக்திக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது ப்ரியாவிற்கு தெரிய வருகின்றது. இதனையடுத்து சக்தியிடம் சென்ற ப்ரியா "நீயும் அர்ஜுனும் லவ் பண்ணுறீங்களா" எனக் கேட்டு மிரட்டுகின்றார். 


பின்னர் காவியா வந்து சக்தியின் கன்னத்தில் பளார் என்று அறைந்து "சொல்லடி லவ் பண்ணுறீங்களா" எனக் கேட்கின்றார், பின்னர் சக்தியும் ஆமாம் எனக் கூறி ஒத்துக்கொள்கின்றார்.


அதுமட்டுமல்லாது இந்தக் கல்யாணம் எனக்கு பிடிக்கல, எப்பிடியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க" எனக்கூறி கையெடுத்துக் கும்பிட்டு கதறி அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement