தென்னிந்திய திரைப்பட நாயகியான சாய்பல்லவி 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த மாபெரும் வெற்றியாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.
பின்னர் தியா,மாரி 2, என்.ஜி.கே, கார்க்கி என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திகேயா 2' போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இதனை நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Listen News!