• Sep 21 2024

துல்கர் சல்மானுடன் இணைந்த நடிகை பூமிகா- சீதா ராமம்' படத்தின் புதிய லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகரான இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'சீதா ராமம்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். ரஷ்மிகா மந்தானா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்குகிறார். இதனை ஸ்வப்னா சினிமா எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படத்தின் புதிய கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை பூமிகா சாவ்லா மிருணாளினி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஷ்ணு சர்மாவின் மனைவி என்ற துணைப்பெயருடன் இந்த கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement