• Nov 16 2024

தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டினார்.. தயாரிப்பாளர்கள் வட்டி கட்டினார்கள்.. அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் ஏமாற்றி அந்த பணத்தில் போயஸ் கார்டனில் வீடு கட்டி உள்ளார் என்றும் ஆனால் அவருக்கு பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் வட்டி மேல் வட்டி கட்டி நஷ்டப்பட்டு விட்டார்கள் என்றும் ஒரு முன்னணி நடிகரே தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்யலாமா என்றும் டாக்டர் காந்தாராஜ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ் சமீபத்தில் ’ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது 16 வயதில் போயஸ் கார்டன் சென்றதாகவும் அப்போது ரஜினி மற்றும் ஜெயலலிதாவின் வீட்டை பார்த்துவிட்டு இதே இடத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சவால் விடுத்ததாகவும் கூறி இருந்தார்.

தனுஷின் இந்த பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர் என்றும் வெற்றி பெற்றுவிட்டால் எப்படி வேண்டுமானாலும் பொய் சொல்லலாமா? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியது அவருடைய சொந்த பணம் அல்ல என்றும் தயாரிப்பாளர்களை ஏமாற்றி அட்வான்ஸ் பணம் வாங்கி அந்த பணத்தில் தான் அவர் வீடு கட்டி உள்ளார் என்றும் அவருக்கு பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் தற்போது வட்டி மேல் வட்டி கட்டி பெரும் நஷ்டத்தை அடைந்து உள்ளார்கள் என்றும் டாக்டர் காந்தாராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேலாவது தனுஷ் அட்வான்ஸ் பணம் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து அவர்களுடைய படத்தை முடித்து தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்களின் சாபம் அவரை சும்மா விடாது என்றும் தனுஷ் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் தனுஷ் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அவர் கட்டிய வீட்டின் மதிப்பு 150 கோடி, ஆனால் அதில் ஒரு சில கோடிகள் மட்டும் தான் அவர் ஒரு சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கியுள்ளார். மற்றபடி அவர் உழைத்து சேர்த்த பணத்தில் தான் வீடு கட்டி உள்ளார் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement