• Jan 15 2025

கோட் படத்தின் டிரைலரில் இது தேவையா? புதிதாக வெடித்த சர்ச்சை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் விஜய். ஆனால் விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது ஏதாவது சர்ச்சைகள் கிளம்பியவாறு இருக்கும். இவருடைய படங்கள் பெருமளவில் சர்ச்சைகள் இல்லாமல் வெளியானதே இல்லை எனலாம்.

விஜயின் கோட் படத்தின் டிரைலர் இன்றைய தினம் வெளியான நிலையில், எப்போதும் போலவே ஒரு சர்ச்சையை படக்குழுவினரே  தொடங்கியுள்ளனராம். இதனை பிரபல திரை விமர்சகர் ஆன செய்யாறுபாலு தெரிவித்துள்ளார்.

அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் திரை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் இதெல்லாம் ஒரு அப்டேட்டா என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படக்குழு பெரிய ஏமாற்றத்தினை கொடுத்தது. பொதுவாக விஜய் படத்தின் பாடல்கள் வைரலாகி பெரிய ஹிட் அடிக்கும். ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இதுவரை விமர்சனங்களை தான் அள்ளிக் குவித்தது.


ஆனாலும் தற்போது இதற்கெல்லாம் எதிர்மறையாக கோட் படத்தின் டிரைலர் செம வரவேற்பு பெற்றுள்ளது. 2 நிமிடம் 52 நொடிகள் ஓடும் இந்த டைலரில் படக்குழு எல்லாருக்குமே முக்கியத்துவத்தை கொடுத்து காட்டியுள்ளது. அதிலும் பிரசாந்த் வாய்ஸில் தொடங்கும் இந்த படம் அவருக்கு இப்படத்தில் பலமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் படக்குழுவினரே இந்த முறை ஒரு பிரச்சனையை வம்பாக இழுத்து விட்டுள்ளார்கள். அதாவது இந்த படத்தில் விஜயின் பெயர் காந்தி. அவர் யாருடனோ தொடர்பில் இருப்பதாக சினேகா லைலாவிடம் சொல்லுகின்றார். அடுத்த காட்சியில் விஜய் ஒரு பெண்ணுடன் பப்பில் ஆடிக்கொண்டு உள்ளார். காந்தி வேஷம் போட்டு பார்த்திருக்கேன் காந்தியே வேஷம் போட்டு இப்பதான் பார்க்கிறேன் என மோகன் பேசும் ஒரு டயலாக்கும் இடம்பெற்றுள்ளது.  இதனால் வெங்கட் பிரபுவுக்கு இந்த குசும்பு தேவையா? இந்த பெயரை வைத்து பிரச்சனையை ஆரம்பிக்காமல் இருந்தால் சரி தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement