• May 20 2024

முதல் வாரத்திலேயே நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் யார் தெரியுமா?- வனிதா மகளுக்கு இத்தனை எதிர்ப்பா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் நேற்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதனால் இதில் யார் டைட்டில் வின்னர் ஆகப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அது எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், 18 போட்டியாளர்களில் பாதி பேர் ஒரு வீட்டிலும் மீதி பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். 


ஆனால் கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.அதன்படி, பவா செல்லதுரை, நிக்ஸன், அக்‌ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். 

அவர்களுக்கான ரூல்ஸ்படி, யாரும் அந்த வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; பாத்ரூம் க்ளினிங்கை அவர்கள்தான் செய்ய வேனும்; பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைப்பதைத்தான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதில் அதிகபட்சமாக 4 பேர் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவை தான் நாமினேட் செய்து இருந்தனர். மேலும் யுகேந்திரனுக்கு 3 ஓட்டு மற்றும் பிரதீப்புக்கு 3 ஓட்டு விழுந்ததால் அவர்களும் நாமினேட் ஆகி உள்ளனர்.

மொத்தமாக நாமினேஷன் லிஸ்டில் 7 பேர் இடம் பிடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோவிகா- 4 ஓட்டுகள்

யுகேந்திரன் - 3 ஓட்டுகள்

பிரதீப் - 3 ஓட்டுகள்

பவா செல்லத்துரை

ஐஷு

அனன்யா

ரவீனா 



Advertisement

Advertisement