• Sep 10 2025

அடடே..! ஆரம்பமே களைகட்டுதே... ‘3BHK’ படத்தின் 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதைகளை மையமாகக் கொண்டு, தரமான கதைக்களங்களுடன் உருவாகும் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படம் தான் ‘3BHK’.


இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி, தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் சிறப்பான நடிகர்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமல்ல, பாக்ஸ் ஆபிஸிலும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் 2 நாள் Box Office வசூல் குறித்து தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


சினிமா விமர்சனம் மட்டும் அல்ல, வசூல் ரீதியாகவும் ‘3BHK’ சிறந்த தொடக்கத்தைப் பெற்றிருக்கிறது. அந்தவகையில், தற்பொழுது வெளியான புதிய தகவல்களின் அடிப்படையில்,  ‘3BHK’ படம் ரூ. 3 கோடி வரை Box Office வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement