• Apr 28 2024

ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்ன என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு வாரமும் பல நடிகர் மற்றும் நடிகைகளில் திரைப்படங்கள் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் வெளியாகக் காத்திருக்கின்றன. இந்த வகையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.


1.ஜெய், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள எண்ணித்துணிக திரைப்படம்
இப்படத்தை எஸ்.கே. வெற்றிச் செல்வன் இயக்கியுள்ளதோடு வில்லனாக வம்சி கிருஷ்ணா நடிக்கிறார்.ஆகஸ்ட் 4ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

2.அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருத ஆட்டம் திரைப்படம்
இதனை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளதோடு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். இந்தப் படம் ஆகஸ்ட் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

3.அருள்நிதி நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் டைரி
இயக்குநர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் கிரைம் திரில்லர் ஜோனரில், டைரி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

4.சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம்.
இது அறிமுக இயக்குநர்களான ஹரி-ஹரிஷ் கூட்டணியில் உருவாகியுள்ளதோடு இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

  1. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்
    இப்படத்தை இயக்குநர் முததையா இயக்கியுள்ளதோடு அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
  1. தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம்.
    இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளதோடு பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதேபோல் அனிருத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
  1. ஆண்ட்ரியாவின் பிசாசு 2 திரைப்படம்
    இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணா மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement